நெருங்கும் மக்களவை தேர்தல் !! மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல் !!

This news gives information about Lok Sabha Election Main administrator's dissociation from Makkal Needhi Maiam party !!

மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை நாளை மறுநாள் வெளியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் குமாரவேல் கட்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசனிடம் கடிதம் வழங்கினார்.

கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார்.

இந்நிலையில்  இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம்  தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது.

மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என கமல்ஹாசன் அறிவித்தார்.அதேபோல்  மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம்  கட்சிக்கு “டார்ச் லைட்” சின்னமாக ஒதுக்கப்பட்டது.

unknown node

மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை நாளை மறுநாள் வெளியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

unknown node

இந்நிலையில்  மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் குமாரவேல் கட்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசனிடம் கடிதம் வழங்கினார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்  கடலூர்-நாகை பொறுப்பாளராக இருந்தவர்  குமாரவேல் ஆவார்.அதேபோல் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தியால் பதவி விலகியதாக தகவல் வெளியாகி வருகிறது.