எவ்வளவு கேவலமாக இருக்குனு பாருங்க.,தயவு செய்து சிந்தியுங்கள் – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Minister Dindukkal Srinivasan's criticism of the AIADMK regime has caused a great stir among the volunteers.

அதிமுக ஆட்சி குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளது தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் அ.தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனால் கூட்டத்தில் சலசப்பு ஏற்பட்டது. அமைச்சர் பேசியதாவது, பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கக்கூடாது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் நீதிமன்றத்தில் தடை உத்தரவு கேட்டனர்.

ஆனால், நீதியரசர்கள் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எண்டு கூறியதால், நாமெல்லாம் மகிழ்ச்சியாக பொங்கல் பரிசு ரூ.2500ஐ பெற முடிந்தது. மக்களுக்கு வழங்குவதை கெடுப்பீர்கள், ஆனால் வாழ்த்த மாட்டிங்க. ஆனால் நீங்கள் சொன்னதை எல்லாம் நாங்கள் கொடுத்தாச்சு என்றால் கேட்பையில் நெய் வடிக்கிறது என்றால் கேட்பாருக்கு எங்க போச்சு அறிவு என்று தான் சொல்வார்கள்.

தயவு செய்து இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள். எவ்வளவு அசிங்கமாக போய்க்கிட்டு இருக்கிறது என்று சிந்தியுங்கள் என்று பொதுமேடையில் என்ன பேசுவது என்று தெரியாமல் உளறிவிட்டார். அமைச்சர் பேசியது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.