திருவிழாக்களில் ஆடல் பாடலில் ஆபாச நடனங்களுக்கு அனுமதி கூடாது.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன் - குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதி அளிக்க கூடாது. - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன் – குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதி அளிக்க கூடாது. – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

பொதுவாக கோயில் திருவிழாக்களில் ஆடல் – பாடல் நிகழ்ச்சி நடைபெறும். அதில் ஒரு சில ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் ஆடுவது குறித்து மதுரை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன்படி, திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன் – குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதி அளிக்க கூடாது எனவும், அதனை தடுக்க தனி பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், சாதி பாடல்களை ஒலிபரப்பவில்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும் எனவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.