மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனை உள்ளது.இந்த மருத்துவமனை தென் மாவட்ட மக்களுக்கு முக்கிய மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த மருத்துவமனையில் மீன் விற்பனை செய்யும் ஒருவர் மருத்துவமனையில் உள்ள மேல் தளத்தில் மீன்கள் எடுத்து செல்லும் காட்சி வெளியானது.
இந்நிலையில் நோயாளிகளை ஸ்டெச்சரில் அழைத்து செல்வதாக உள்ள சாய்தளத்தில் மீன் வியாபாரி ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.இதனால் மருத்துவமனையில் மேன் விற்பதாக குற்றசாட்டுகள் எழுந்தது.
இதை தெடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் முதல்வர் வனிதா கூறுகையில் , மருத்துவமனையின் மேல் தளத்தில் உள்ள உணவகத்திற்காக மீன் கொண்டு செல்லப்பட்டதாகவும் , மீன் கொண்டு வந்தவர் மீன் வியாபாரி அல்ல , கொண்டுவந்த மீன் விற்பனைக்கும் அல்ல என முதல்வர் வனிதா கூறினார்.