மன வளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள்.!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள யுத்தபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி(40). இவர் கிராமத்தை சார்ந்த மன வளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமி கடந்த 2017-ம்

அரியலூர் மாவட்டம் யுத்தபள்ளம் கிராமத்தை சேர்ந்த கோபி அதே கிராமத்தை சார்ந்த மன வளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமியை கோபி வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மகிளா நீதிமன்றம் குற்றவாளி கோபிக்கு ஆயுள் தண்டனையும் , 10 ஆயிரம் அபராதமும்  விதித்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள யுத்தபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி(40). இவர் கிராமத்தை சார்ந்த மன வளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமி கடந்த 2017-ம் ஆண்டு வன்கொடுமை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர்.

இந்த வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த  வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியதாரா குற்றவாளி கோபிக்கு ஆயுள் தண்டனையும் , 10 ஆயிரம் அபராதம் விதித்து தண்டனை தீர்ப்பளித்தார்.