நிதி ஆயோக் தொடர்பு அதிகாரியாக மங்கத்ராம் சர்மா நியமனம் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.!

Government of Tamil Nadu has appointed Mangadram Sharma, Director, Modern Agricultural Irrigation and Water Resources Project, as the Finance Liaison Officer.

நவீன வேளாண் பாசனம் மற்றும் நீர்நிலை மீட்பு திட்ட இயக்குநர் மங்கத்ராம் சர்மாவை நிதி ஆயோக் தொடர்பு அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் வகையிலும், அவை மக்களுக்குச் சென்றடைவதை ஆய்வு செய்யும் வகையிலும் புதிய முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தப் புதிய திட்டத்துக்கான தொடா்பு அதிகாரியாக முதன்மைச் செயலா் அந்தஸ்திலான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என நீதி ஆயோக் அமைப்பு தெரிவித்திருந்தது.

இதன் அடிப்படையில், அரசின் முதன்மைச் செயலாளா் மங்கத்ராம் ஷர்மா, நிதி ஆயோக் தொடா்பு அதிகாரியாக நியமனம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு அறிவித்திருந்தார். இந்த நிலையில், நவீன வேளாண் பாசனம் மற்றும் நீர்நிலை மீட்பு திட்ட இயக்குநர் மங்கத்ராம் சர்மாவை நிதி ஆயோக் தொடர்பு அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மை திட்ட இயக்குநர் பதவி வகித்து வந்த மங்கத்ராம் ஷர்மாவுக்கு கூடுதலாக சமூக சீரமைப்புத்துறை கடந்த ஜூன் மாதம் தமிழக அரசால் ஒதுக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் புதிய திட்டத்துக்கான நிதி ஆயோக் தொடர்பு அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

unknown node