மயிலாடு துறையில் கள்ளச்சாராயம் குடித்து 2 பேர் பலி...!

Two persons have died after consuming illicit liquor in Mayiladuthurai. Two more have been admitted to hospital for treatment.

மயிலாடு துறையில் கள்ளச்சாராயம் குடித்து 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் மாவட்ட கண்காணிப்பாளர் பல்வேறு சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சேந்தன்குடியில் ஐந்து நபர்கள் ரகசியமாக கள்ளச்சாராயம் வாங்கி அருந்தி வந்தனர். அதில் இரண்டு பேர் கள்ளச்சாராயம் அருந்தியவுடன் கண் தெரியாமல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வந்தபோது அவர்கள் இருவருமே உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடு துறையில் கள்ளச்சாராயம் குடித்து 2 பேர் பலி...!