பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் வெற்றிக்காக மதிமுக பாடுபடும் -வைகோ

This news gives information about MDMK strives to win over Barimenture seat in Perambalur constituency

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் வெற்றிக்காக மதிமுக பாடுபடும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்- மதிமுக – விசிக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  –இந்திய கம்யூனிஸ்ட் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் –  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – ஐஜேகே ஆகிய கட்சிகள் உள்ளது.

இந்நிலையில் பெரம்பலூரில் ஐஜேகே நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை எழும்பூரி உள்ள மதிமுகவின் தாயகத்தில் வைகோவை சந்தித்தார்.

இதன் பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் வெற்றிக்காக மதிமுக பாடுபடும். பெரம்பலூரில் பாரிவேந்தர் வெற்றி பெற்று தமிழகத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பார். மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றிபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.