தொடக்கப்பள்ளிக்கு அதிக முக்கியத்துவம்.! பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.!

By

தொடக்கப்பள்ளி கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால், மாணவர்கள் அடுத்து 6ஆம் வகுப்பு மேல் சரியாகி விடுவார்கள். ஆதலால், தொடக்க கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.   

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது என்றால், அது மாணவர்கள் தான். அவர்களின் கல்வித்திறன் வெகுவாக குறைந்துள்ளது என்ற குற்றசாட்டு பொதுவாக கூறப்படுகிறது.

தற்போதைய காலாண்டில் தான் முழுமையாக மாணவர்கள் ஆரம்பம் முதல் பள்ளிக்கு நேரடியாக சென்று படித்து வருகின்றனர். இருந்தும் கடந்த 2 கல்வியாண்டு சரியாக அமையாத காரணத்தால், தமிழகத்தில் அதற்கான நடவடிக்கை என்ன என்பது பற்றி தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

அவர் கூறியதாவது, ‘ தொடக்கப்பள்ளி கல்வி தான் மாணவர்களுக்கு மிக முக்கியம். அதற்க்கு முக்கியத்துவம் கொடுத்தால் போதும், அடுத்து 6ஆம் வகுப்புக்கு மேல் எப்படி படிக்க வேண்டும் என மாணவர்களுக்கு நன்றாக தெரிந்து விடும். ஆதலால் தொடக்க கல்வியில் மாணவர்கள் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் ‘என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.

Dinasuvadu Media @2023