அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான ஊழல் வழக்கு.! பிடிவாரண்ட் பிறப்பிக்கவும் உத்தரவு.!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் வீட்டு

Minister I Periyasamy case in madras high court

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த போது வீட்டுவசதி துறைக்கு சொந்தமான இடத்தை திமுக பிரமுகருக்கு மாற்றியது என அவர் மீது வழக்கு பதியப்பட்டது.

2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்சஒழிப்புத்துறை சார்பில் பதியப்பட்ட இந்த வழக்கானது எம்எல்ஏ, எம்பிக்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதாக நீதிபதி உத்தரவிட்டார்.

ReadMore – இன்று திறக்கப்படும் கலைஞர் நினைவுகம்.! என்ன ஸ்பெஷல்.?

அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து மறுவிசாரணை செய்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தலைமையிலான அமர்வு இந்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதியுடன் இறுதி விசாரணை நிறைவுபெற்று தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கபட்டது.

இதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி அனந்த வெங்கடேசன் அறிவித்தார். அதில், ஊழல் வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சென்னை சிறப்பு நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், மீண்டும் இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், வரும் மார்ச் 28ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகி ஒரு லட்ச ரூபாய் பிணை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஜூலைக்குள் விசாரணை முழுதாக நிறைவுபெற வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார்.