சென்னையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டு, டாஸ் போட்டதுடன், பேட்டிங் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இன்று சென்னை கண்ணகி சிலை அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு அகில இந்திய குடிமைப்பணி மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் வெள்ளை நிற உடைகளை அணிந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பின்னர் போட்டியை டாஸ் போட்டு தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது அதில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் முதலில் பந்துவீச, அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டிங் செய்து அசத்தியது, அங்கிருந்த அதிகாரிகளை வெகுவாக கவர்ந்தது.
unknown nodeஅதனை தொடர்ந்து முன்னதாக போட்டியை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என தெரிவித்தார். மேலும், விளையாட்டின் மூலம் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், மன அழுத்தத்தை போக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.