கனமழை காரணமாக 17 முகாம்களில் 397 குடும்பங்கள் தஞ்சம்! அமைச்சர் வேலுமணி தகவல்!

தென்மேற்கு பருவக்காற்று வீசுவதன் காரணமாக தமிழகத்தில் கோயம்பத்தூர், நீலகிரி ஆகிய மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில்

தென்மேற்கு பருவக்காற்று வீசுவதன் காரணமாக தமிழகத்தில் கோயம்பத்தூர், நீலகிரி ஆகிய மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பொதுமக்களின் வீடுகள் சேதமடைந்து மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இது குறித்து அமைச்சர் வேலுமணி பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் , ‘ கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.72 வீடுகள்ஓரளவு சேதாரமும்,27 வீடுகள்முழுமையக மழையால் சேதமும் அடைந்துள்ளது. மொத்தமாக99 வீடுகள்சேதமடைந்துள்ளது.’ எனவும்

மேலும், ‘நொய்யல்ஆற்றில்40 ஆண்டுகள்கழித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்17 முகாம்களில்,397 குடும்பங்கள்தங்கவைக்கப்பட்டுள்ளான். இங்கு சுமார் 1000க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மழையால்ஏரி, குளம்நிரம்பி விடும் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.’ எனவும் தெரிவித்தார்.