உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா – மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

மாகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில் பாஜகவை சேர்ந்த பட்நாவிஸ் முதமைச்சாராக பொறுப்பேற்றார்.ஆனால் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்ட நிலையில் பட்நாவிஸ் தனது அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
பட்நாவிஸ் ராஜினாமா செய்த நிலையில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா கட்சிகள் சார்பில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.எனவே நாளை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். நாளை மாலை 6.40 மணியளவில், சிவாஜி பார்க்கில் வைத்து நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சராக பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே.
மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மேலும் காங்கிரஸ் முதலமைச்சர்கள் ,மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பனர்ஜி மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025