ஒரே சமூகத்தில் காதல் திருமணம்! வெட்டி கொலைசெய்யப்பட்ட புதுமாப்பிள்ளை!

Default Image

திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி ஊரை சேந்தவர் அருணாச்சலம். இவரது 2 வது மகன் நம்பிராஜன் , அங்குள்ள பால்பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரது மகள் வான்மதி என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் ஒருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெண்வீட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த எதிர்ப்பை மீறி காதல் ஜோடி சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டு, திருநெல்வேலி டவுனில் குடியேறினர்.  இந்நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதியில் குடியேறிய முத்துப்பாண்டி என்பவருடன் நம்பிராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டு, தன் வாழ்வில் நடந்தவற்றை கூறியுள்ளார்.
பிறகு நேற்று முன்தினம் இரவு முத்துபாண்டியன், நம்பிராஜனுக்கு போன் செய்து, தங்கபாண்டியன் குடும்பத்தாருடன் சமாதானம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து, தன் மனைவிடம் விவரத்தை கூறி, அங்கிருந்து புறப்பட்டார்.
நம்பிராஜன் சென்ற இடத்தில் வான்மதியின் அண்ணன் செல்லசாமி உடன் செல்லத்துரை, முருகன் என மேலும் இருவர் இருந்துள்ளனர். அங்கு சென்றதும் நம்பிராஜனை தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் தாக்கி வெட்டி கொலை செய்தனர். பின்னா நம்பி ராஜன் உடலை அருகில் உள்ள  தண்டவாளத்தில் போட்டு விட்டனர். அதில் ரயில் ஏறி, நம்பிராஜன் தலை துண்டானது.
இதற்கிடையில் கணவனை காணாமல் வான்மதி, தன் மாமனார் அருணாச்சலத்திற்கு போன் செய்து விவரத்தை கூறினார். பின்னர் அருணாச்சலம் போலீசில் புகார் செய்யவே, போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு நம்பிராஜனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அளித்தனர். பின்னர், தலைமறைவாகியுள்ள முத்துப்பாண்டி, செல்லத்துரை,  செல்ல சாமி ( வான்மதி அண்ணன்), முருகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri