இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்- முத்தரசன்

This news gives information about MK Stalin will announce the competing seats of the Communist Party of India - Muthrasaran

அண்ணா அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது தொடர்பாக திமுகவுடன் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று  சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், திமுக தொகுதிப்பங்கீட்டுக்குழுவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது .திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.