தமிழகம் வந்த பிரதமர் மோடி!!!மீண்டும் உலக அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகிய #GoBackModi

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி # GoBackModi என்ற ஹேஷ் டாக் தான் உலக அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி #GoBackModiஎன்ற ஹேஷ் டாக் தான் உலக அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி ராணுவ கண்காட்சியை தொடக்கி வைக்க ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் வந்தார்.அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoBackModiஎன்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்டாகியது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக  பிரதமர் நரேந்திர மோடி  இன்று தமிழகம் வந்தார்.

இதனால்  நேற்று முதலே சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் மீணடும் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModiஎன்ற ஹேஷ் டாக் ட்ரெண்டாகி வருகிறது.அதேபோல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் #MaduraiThanksModi என்று ஹேஷ் டாக்கும் ட்ரெண்டாகி வருகிறது.இந்த இரு ஹேஷ் டாக்குகளும் போட்டி போட்டு ட்ரெண்டாகியது.

unknown node

இந்நிலையில் சமூக வலைத்தலமான ட்விட்டரில் இன்று #GoBackModiஎன்ற ஹேஷ் டாக்கும், #GoBackSadistModi என்ற ஹேஷ் டாக்கும்,#TNWelcomesModi என்ற ஹேஷ் டாக்கும் போட்டி போட்டு ட்ரெண்டாகி வருகிறது.ஆனால் #GoBackModiஎன்ற ஹேஷ் டாக் தான் உலக அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.