தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்..? ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை..!

Rajiv Ranjan advises on imposing more corona restrictions in Tamil Nadu

தமிழகத்தில் மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ரஞ்சன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் கொரோனா பாதிப்பு 8,000 நெருங்கியதால் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அல்லது வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது உள்ளிட்டவைகளை குறித்து ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.