தனது குழந்தையை கொடூரமாகத் தாக்கும் தாய் – வீடியோ வெளியானதால் பரபரப்பு!

தனது குழந்தையை தாய் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த வடிவழகன் என்பவரின் மனைவி துளசி, தனது குழந்தையை தாக்கியதும், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது துளசி தனது இரண்டு வயது இளைய மகனை அடித்து துன்புறுத்தியதாக தெரிய வந்துள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக மனைவி துளசியை ஆந்திராவில் உள்ள தாய் வீட்டில் விட்டு வந்த வடிவழகன், வீட்டில் இருந்த அவரது செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அதில் தங்களது இளைய மகனை, துளசி கொடூரமாக தாக்கும் வீடியோவை அவரே பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
தாய் தாக்கியதில் படுகாயம் அடைந்த குழந்தை சிகிச்சை பின் குணமடைந்து, உறவினர்களின் பராமரிப்பில் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. குழந்தையை தாய் தாக்கிய சம்பவம் தொடர்பாக கணவர் அளித்த புகாரின் பேரில், துளசி மீது 3 பிரிவுகளில் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
மேலும், அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை ஆந்திராவுக்கு விரைந்துள்ளது. இதனிடையே, குழந்தையை தாய் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025