கட்டண உயர்வால் 7 பயணிகளுடன் சென்ற மலை ரயில்..!

நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் ,வெளி நாட்டுகள் மற்றும் உள்ளூர்வாசிகளும் வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் ,வெளி நாட்டுகள் மற்றும் உள்ளூர்வாசிகளும் வருகின்றனர்.

இந்நிலையில் மலை ரயிலில் பயணம் செய்ய அனைவரும்ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதையெடுத்து கடந்த  1-ம் தேதில் முதல் மலை ரயில் கட்டணத்தை தெற்கு ரயில்வே இரண்டு மடங்காக உயர்த்தியது.

முன்பு  குன்னூர், ஊட்டி இடையே 35 ரூபாய் கட்டணம் செலுத்தி சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர். ஆனால் தற்போது 80 ரூபாயாகவும், முதல் வகுப்பிற்கான  ரூ.185- லிருந்து  ரூ.290 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வால்  சுற்றுலா பயணிகள் பயணம் செய்வதை  நிறுத்தியுள்ளனர். இதனால் மலை ரயிலில் பயணிகளின்றி நேற்று முன்தினம்  7 பயணிகளுடன் ரயில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.