மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவின் பெயர் மாற்றம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Government of Tamil Nadu renamed the State Policy Development Committee under the Chief Minister.

முதலமைச்சரின் கீழ் இயங்கும் மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவின் பெயர் மாற்றம் செய்துதமிழக அரசு அரசாணை வெளியீடு.

கடந்த 1971-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த குழு கடந்த 2020ஆம் ஆண்டில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்க மு.க.ஸ்டாலின், சமீபத்தில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவை திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் மற்றும் முழுநேர, பகுதிநேர உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மாநில கொள்கை வளர்ச்சிக் குழு என்ற பெயர், தற்போது மாநில திட்ட ஆணையம் என மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனிடையே, தமிழக முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து முக ஸ்டாலின், பல உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம், துறைகளின் பெயர் மாற்றம் என பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இதற்கு பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

unknown node