கிரண்பேடிக்கு எதிராக நாராயணசாமி போராட்டம்.!

புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடியை கண்டித்து அண்ணா சிலை அருகே முதல்வர் நாராயணசாமி போராட்டம்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட 400 பேர் கொண்ட துணை ராணுவம் வந்திருந்தது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் நாராயணசாமி இல்லத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது. காங்கிரஸ், பாஜக கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரிக்கு துணை ராணுவம் வந்துள்ளது என தெரிவித்திருந்தனர்.
அதாவது, கிரண்பேடியை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்திருந்தது. இதுபோன்று முதல்வர் இல்லத்தை முற்றுகையிட போவதாக பாஜகவும் அறிவித்திருந்தது. இந்த நிலையில், புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடியை கண்டித்து அண்ணா சிலை அருகே முதல்வர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மக்கள் நலத்திட்டங்களுக்கு தடையாக இருப்பதாக கூறி, கிரண் பேடியை திரும்பப்பெற காங்கிரஸ் வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025