இயற்கை புயலோ? செயற்கை புயலோ? புயல் தூள் தூளாகிவிடும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Minister RP Udayakumar personally inspected the precautionary measures taken in Thoothukudi, Tirunelveli and Tenkasi districts.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

புரவி புயல் எதிரொலியையடுத்து, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ‘நீர் மேலாண்மை திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி,  விருதுகள் பெற்றுள்ளோம் என்றும்,  இயற்கை புயலோ? செயற்கை புயலோ? முதல்வர் வகுக்கும் வியூகங்களில் புயல் தூள் தூளாகி விடும்  என்று  தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், புயல் காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ள மாவட்டங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றும், தண்ணீர் வருமா என எதிர்பார்த்த மதுரை மக்களின் கண்ணீர் முல்லைப்பெரியாறு திட்டத்தால் துடைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.