ரூ.1597.59 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்டம் – தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Chief Minister MK Stalin inaugurated the Rs. 1597.59 crore welfare assistance of the Rural Development Department.

ஊரக வளர்ச்சித் துறையின் ரூ.1597.59 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.1597.59 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்ட உதவிகளை காணொளி வாயிலாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்தார்.

unknown node

சமூக நலத்துறை சர்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.699.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் வங்கிக்கடன் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், செயலாளர் மற்றும் தலைமை செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.