புதுச்சேரியில் இருந்து 60 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிவர்..!

Nivar, which crossed the coast, is currently located 60 km northwest of Pondicherry. The wind is blowing at a speed of 85 to 95 km per hour.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரிக்கு அருகே நேற்று இரவு 11 .30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணி வரை அதி தீவிர புயலாக இருந்த நிவர் தீவிர புயலாக வலுவிழந்து முழுமையாக கரையை கடந்தது.

தீவிர புயலாக வலுவிழந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தொடர்ந்து நிவர் புயல் புயலாக வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த பகுதிகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

இந்நிலையில், கரையைக் கடந்த நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 60 கிலோமீட்டர் வடமேற்கே நிலப்பகுதியில் நிலை கொண்டுள்ளது. நிலத்தில் நிலைகொண்டுள்ள நிவர் 85 முதல் 95 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. நிவர் புயல் தற்போது நிலப்பகுதிக்குள் நகர்ந்து வருவதால் தொடர்ந்து வலுவிழந்து வருகிறது.

unknown node