புதுச்சேரி அருகே 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் நிவர்..!

As Nivar passes near Pondicherry as a severe storm, it is raining with thunder. The wind speed is gradually increasing.

அதி தீவிர புயலாக நிவர் புதுச்சேரிக்கு அருகே கடந்து வரும் நிலையில், இடியுடன் மழை பெய்து வருகிறது. காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நிவர் புயல் 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் மையப்பகுதியை கரையை கடந்து வருவதால் கடலோர பகுதி பலத்த மழைபெய்து வருகிறது.

புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் நிகர் புயல் கரையை கடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.