புதுச்சேரி அருகே இரவு 8 மணிக்கு பிறகு நிவர் புயல் கரையை கடக்கும்.!

The Chennai Meteorological Department said that it will cross the coast near Pondicherry after 8 pm tonight

புதுச்சேரி அருகே இன்று இரவு 8 மணிக்கு பிறகு கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயலானது அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்க உள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் மணிக்கு 11 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது என்றும் நிவர் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து கரையை கடக்கக்கூடும்.

இந்நிலையில், நிவர் புயல் இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும், இரவு 8 மணி முதல் புயலின் தீவிரம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். அதன் படி, நிவர் புயல் நகர்ந்து வரும் பாதையில் எந்த மாற்றமும் இல்லை புதுச்சேரி அருகே இன்று இரவு 8 மணிக்கு பிறகு கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது