நிவர் புயல் பாதிப்பு – கடலூரில் முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு.!

hief Minister Palanisamy has visited the damaged banana plantation in Cuddalore district affected by the Nivar storm

நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த வாழைத் தோட்டத்தை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி வருகிறார் முதல்வர் பழனிசாமி.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கும் மீட்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்கும்முதல்வர்பழனிசாமிகடலூர் புறப்பட்டார். அந்த வகையில்,தற்போது கடலூர் மாவட்டத்தின் ரெட்டி சாவடியில் நிவர் புயல் பாதிப்புகள் ஏற்பட்ட விவசாயிகளிடம் பாதிப்பு விவரத்தை கேட்டு அறிந்தார். மேலும், சேதமடைந்த வாழைத் தோட்டத்தை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி வருகிறார்.

இதற்கிடையில், ஆய்வும் செய்யும் பணியில் முதல்வருடன் அமைச்சர் எம் சி சம்பத் கடலூர் மாவட்ட ஆசிரியர்களுடன் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.