'நிவார் புயல்' – துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

In the next 24 hours it will intensify into a storm, with the 3rd warning cage rising due to the Nivar storm.

அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக வலுப்பெற உள்ள, நிவார் புயல் காரணமாக 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டிருந்தது. இதனையடுத்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக வலுப்பெற இருக்கிறது. மேலும், இந்தப் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இந்த புயலுக்கு ‘நிவார்’ என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் எண்ணூர், கடலூர், பாம்பன், புதுச்சேரி காரைக்கால் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.