பாஜகவில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்.!

Former Indian cricketer Lakshman Sivaramakrishnan joins party in presence of BJP state president L Murugan

பாஜகவில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளரும், உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வர்ணையாளர்களில் ஒருவரான லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன், இன்று சென்னையில் தமிழக பாஜக மாநில தலைவர் எல் முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். இதனிடையே, சட்டமன்ற தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான கூட்டம் சென்னை அண்ணா நகரில் விஜய் ஸ்ரீ மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய பொது செயலாளர் சி.டி ரவி முன்னிலையில் பலர் பாஜகவில் இனைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.