மடிக்கணிணி இல்லை., மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

The tape will be given to 6th to 8th class students, said the Minister of School Education, Senkottayan.

6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை திட்ட பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இன்று பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இல்லை. அதற்கு பதிலாக 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை. தற்போது 98.5 சதவிகித மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருகிறார்கள் என்றும் 10,12-ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணைகள் வெளியிடுவது குறித்து முதல்வர் முடிவு செய்து பள்ளிகல்வித்துறை ஆலோசனையுடன் அட்டவணைகள் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப இந்த மாத இறுதிக்குள் அதற்கான அட்டவணை வெளியிடப்படும். நீட் தேர்வு இருமுறை நடத்துவது குறித்து மத்திய அரசு தெரிவித்த பிறகுதான் நீட் தேர்வு எவ்வாறு நடத்துவது என்பது முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.