புதுச்சேரிக்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கவில்லை– பிரதமர் மீது முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!

Former Chief Minister Narayanasamy has accused Prime Minister Narendra Modi of not announcing any new projects for the state of Pondicherry.

புதுச்சேரி மாநிலத்திற்கு புதிதாக எந்தவொரு திட்டத்தை பிரதமர் மோடி அறிவிக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி மாநிலத்திற்கு புதிதாக எந்தவொரு திட்டத்தை பிரதமர் மோடி அறிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், பிரதமர் மோடி மக்களை திசை திருப்ப பொய்யான தகவல்களை கூறிவருவதாக தெரிவித்தார்.

மேலும், பண பலம் மற்றும் அதிகார பலம் காரணமாக ஆட்சிக்கு வரலாம் என பாஜக நினைத்து வருவதாகவும், தற்பொழுது வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி, புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்து, பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.