வாரிசு, துணிவு பட சிறப்புக் காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்ட 34 திரையரங்குகளுக்கு நோட்டீஸ்.!

இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும், கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில்

இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும், கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு படங்களுக்கும் ஜனவரி 11,12,13,18 ஆகிய நான்கு நாட்களில் காலை 09.00 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்திருந்தது.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் வாரிசு, துணிவு திரைப்படங்களை ஜனவரி 11,12,13,18 ஆகிய தேதிகளில் நள்ளிரவு காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்டதாக கூறி 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பான வெளியான அறிக்கையில் ” வாரிசு, துணிவு ஆகிய படங்களுக்கு சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து கூடுதலாக அதிகாலையில் சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாக புகார்ககள் வரப்பெற்றதன் அடிப்படையில், காவல்துறை மற்றும் வட்டாட்சியர்களிடம் விசாரணை அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதிகாலையில் திரைப்படங்களை திரையிட்டது தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1957-ன்படி விதிமீறிய செயலாகும்.

எனவே, மேற்கண்ட தங்களது விதிமீறிய செயலுக்கு ஏன் தங்கள் மீது தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1957-ன்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து இக்குறிப்பாணை கிடைத்த 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தங்களிடமிருந்து பதினைந்து நாட்களுக்குள் விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1957-ன்படி தங்களது திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

unknown node