ஓபிஎஸ்சின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்ப்பு..! அதிமுக தலைமை அறிவிப்பு

துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார். அதிமுக கட்சியிலிருந்து  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தம்பி ஓ.ராஜா

துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.அதிமுக கட்சியிலிருந்து  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தம்பி ஓ.ராஜா அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சியின் கொள்கை கட்டுப்பாடுக்கு எதிராக செயல்பட்டதாக துணை முதல்வர்  ஓபிஸ் தம்பி ஓ.ராஜா அதிமுகவிலிருந்து அதிரடியாக  நீக்கப்பட்டார்.அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில் , அதிமுகவின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாடை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓ.ராஜா  கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளின் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.மேலும் அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில், அதிமுகவில் உறுப்பினராக இணைந்து பணியாற்ற ஓ.ராஜாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேரிலும் கடிதம் மூலமும் வருத்தம் தெரிவித்ததையடுத்து மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.