தூத்துக்குடி :மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி காட்டுப் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. மாணவியின் உடல் பல்வேறு காயங்களுடன் கிடந்த நிலையில், குடும்பத்தினரும் கிராம மக்களும் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரமாண்டியன் நியமிக்கப்பட்டார். சம்பவ இடத்தின் அருகே உள்ள காட்டாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அன்று அப்பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் சென்றதை கண்டறிந்தனர்.அந்த இருசக்கர வாகனத்தின் எண்ணை சிசிடிவி மூலம் கண்டுபிடித்த போலீசார், அது ராமநாதபுரம் மாவட்டம் பாட்டிவனூர் பகுதியைச் சேர்ந்ததாகவும், அங்கு திருட்டு புகார் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது.
திருடப்பட்ட வாகனத்தில் மர்மமானவர்கள் அந்த காட்டுப் பகுதிக்கு எதற்கு வந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அந்த இருசக்கர வாகனத்தை திருடிய மறுமணவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மறுமணவர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் மீது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து முக்கிய வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவியின் கொலைக்கு காரணமான முழு சதியையும், பின்னணியையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவியின் குடும்பத்தினரும் கிராம மக்களும் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
