ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக விரிவான கொள்கை வெளியிட உள்ளோம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் விளையாட்டுகளால் தொடர்ந்து தற்கொலை எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில். இந்த விளையாட்டுகளை தடை செய்யவேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். இதற்கிடையில், இது குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்ற வருகிறது.
இந்த சட்டப் பேரவையில் “ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக விரிவான கொள்கையை வெளியிட உள்ளோம்” என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆன்லைன் தடை சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக தாக்கல் செய்தார். இந்த தடை சட்ட மசோதா ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இம்முறை ஆளுநர் நிச்சயமாக இந்த மசோதாவில் கையெழுத்து இட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.