நீதிமன்றத்திற்குள் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி... உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!

From March 8, only central and state public prosecutors will be allowed inside the Chennai High Court.

சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் மார்ச் 8-ம் தேதி முதல் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள Law Chambers எனும் வழக்கறிஞர்கள் அறை வருகின்ற 8-ஆம் தேதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த மூடல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை Law Chambers மூடப்படுவதால்நாளை வரைஅறைகளில் உள்ள தேவையான ஆவணங்களை எடுத்துக்கொள்ளும்படி வழக்கறிஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் சில வழக்கறிஞர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

unknown node

வழக்கறிஞர்கள் அறைகள் மூடப்பட்டாலும், நீதிமன்ற பணிகள் வழக்கம்போல செயல்படும் எனகூறப்பட்டுள்ளது. மேலும்,சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் மத்திய, மாநில அரசுவழக்கறிஞர்கள்தவிர மற்ற வழக்கறிஞர்களுக்கு அனுமதியில்லை.மற்றவழக்கறிஞர்கள்காணொலி காட்சி மூலமாக மட்டுமே ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 200 நாள்களுக்கு மேலாக இந்த Law Chambers மூடப்பட்டு இருந்தது. மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு தளர்வு மற்றும் வழக்கறிஞர்களின் சங்கங்களின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து கடந்த வாரம் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.