1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!

Minister Anbil Mahesh is consulting with the Directors of School Education at the Chennai General Secretariat.

சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி இயக்குநர்களுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்திய பிறகு ஊரடங்கு அறிவிப்பில் வெளியிட்டார்.

நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி இயக்குநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் அமைச்சர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகளை திறப்பதற்காக செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.