எதிரிகளும் உச்சரிக்கும் பெயர் எம்.ஜி.ஆர் – பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு.!

Chief Minister Palanisamy told the AIADMK public meeting that the AIADMK was the only movement to reunite after the split.

பிரிந்தபின் மீண்டும் இணைந்த ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, அனைத்து துறைகளிலும் தமிழகம் சாதனை படைத்தது வருகிறது. அடுத்த ஆண்டு 1,650 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும். உயர்கல்வி படிப்போர் விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.

மேலும், அதிமுகவையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்கள் தங்கள் வீட்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறார்கள். சில புல்லுருவிகள் அதிமுகவை உடைக்க நினைத்தன. அந்த முயற்சி தவிடுபொடியாகிவிட்டது. பிரிந்த பின் மீண்டும் இணைந்த ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே. அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள். 30 வருடம் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக தான் என்றும் எதிரிகளும் உச்சரிக்கும் பெயராக எம்ஜிஆர் பெயர் உள்ளது எனவும் பேசியுள்ளார்.