உரிய பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உத்தரவு!

Minister Anita Radhakrishnan has ordered to hold jallikkattu competitions in Tamil Nadu with proper security.

தமிழகத்தில் உரிய பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவு.

தமிழ்நாட்டில் உரிய பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கால்நடைத்துறை அலுவலர்களுக்கு கால்நடை மற்றும் மீன்வளதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். மேலும், அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கால்நடைத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், சென்னை நந்தனம் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,உரிய பாதுகாப்புடன்ஜல்லிக்கட்டுபோட்டிகளை நடத்த உத்தரவிட்டார்.