#BREAKING: கூட்டுறவு சங்க ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய ஆணை..!

The Chennai High Court has ordered that the temporary employees working in the co-operative societies should be made permanent.

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வழக்கு தொடராத ஊழியர்களுக்கும் பணி நிரந்தர உத்தரவு செல்லும் எனவும் 8 வாரங்களில் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.