ஒட்டப்பிடாரம் தொகுதி வழக்கு: மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

this news gives information about Ottapidaram block case: The Madras High Court dismissed the petition

ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் செய்து சுந்தர்ராஜன் வெற்றி பெற்றதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த  2016-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுகவின் சார்பில் சுந்தர்ராஜனும், புதிய தமிழகம் கட்சி  சார்பில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும் போட்டியிட்டார்கள்.

இதில் புதிய தமிழகம் கட்சி  சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.எனவே அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவர் தொடர்ந்த வழக்கில், தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் செய்து சுந்தர்ராஜன் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது.

ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஏற்பட்ட மாற்றத்தால் ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் தினகரன் அணிக்குத் சென்றார். முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த நிலையில்  18 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் சுந்தர்ராஜன் பதவி இழந்தார். பின் சுந்தர்ராஜன்  உட்பட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை 3 பேர் கொண்ட உயர் நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

unknown node

இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.பின்னர் அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.