200-க்கும் மேற்பட்ட தனிப்படுக்கைகள் தயார் -புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை இயக்குநர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதன் பின்னர்புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 200-க்கும் மேற்பட்ட தனிப்படுக்கைகள் தயாராக உள்ளன.கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.ஜிப்மர் மருத்துவமனையில் 3 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பை கண்டறியும் மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.