விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 12,820 இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும் என்றும், வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் தனது கட்சியினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சிகளில் நல்லாட்சியை பாமகவால் தான் வழங்க முடியும்.நகர்ப்புற உள்ளாட்சிகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக தமிழகத்தை தற்போது ஆட்சி செய்யும் திமுக அரசின் தவறுகள்,தோல்விகள், முந்தைய அதிமுக அரசின் மீதான விமர்சனங்கள்,எதிர்க்கட்சியாக மக்கள் பணியாற்றத் தவறியது ஆகியவற்றை மக்கள் மன்றத்தில் முன்வைத்து […]
தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.எனினும்,கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.அந்த வகையில்,சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில்,கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் […]
சென்னை:79-வது நாளாக மாற்றமின்றி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல்,டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இதற்கிடையில்,கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி,பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் மத்திய அரசு குறைத்தது.எனினும்,சர்வதேச சந்தையில் கச்சா […]
கடந்த 2 வாரங்களாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில்,நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,இன்று இரவு முதல் திங்கள் அதிகாலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில்,இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,இரவு […]
சென்னை:தமிழகத்தில் இன்று ( 22-ம் தேதி ) ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகையான பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,இன்று (22.01.2022) ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக,பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் […]
திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவரச அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அவரச அறிவிப்பில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டியிருக்கிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், தொகுதி மக்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம் என்றும் விரைவில் உடல்நலம் பெற்று உங்களையெல்லாம் தொகுதியில் சந்திக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள தமிழகத்தைச் சார்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தினை காத்திடும் பொருட்டு, 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வீதமும், 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 இலட்சம் வீதமும், மொத்தம் ரூ.5.66 கோடி வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். மீனவர்களது அனைத்துக் கோரிக்கைகளின் மீதும் ஆய்வு […]
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த பின் ராவத்தின் வீரத்தை போற்றும் வண்ணம் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் சைன் இந்தியாவின் சோல்ஜர் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் 120 கிலோ எடை கொண்ட பிபின் ராவதின் மார்பளவு சிலையை தயாரித்து அதை டெல்லியில் உள்ள ராணுவ போர் நினைவு சின்னத்தில் வைக்க முடிவு. கடந்த ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் மற்றும் அவரது […]
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை மொத்த எண்ணிக்கை 30,72,666 ஆக உயர்வு. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், மேலும் 33 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 28,561 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 29,870 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 33 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புபவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் […]
ஜல்லிக்கட்டு கலையரங்கம், மத்திய சிறைச்சாலை இடமாற்றம், தொழிற்பேட்டை , 100 கோடியில் வைகை வடகரைச் சாலை , 4 முக்கிய பாலங்கள், பாதாள சாக்கடை வசதி என எமது கோரிக்கைகளை ஏற்று அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் ட்வீட். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றது முதல், தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில், இன்று மதுரையில், 320 கோடி ரூபாய் மதிப்பில் […]
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கலைஞர் கருணாநிதி திருத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த 1970-ஆம் ஆண்டு தமிழ்த்தாய் வாழ்த்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி திருத்தியது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடல் வரிகளை குறைத்து தமிழ்தாய் வாழ்த்தாக மாற்றப்பட்டதை எதிர்த்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007ல் மோகன்ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தமிழ்தாய் வாழ்த்தை திருத்தியது செல்லும் என உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல். சென்னை ரிப்பன் மாளிகைகள் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம். இல்லையெனில் தொற்று எளிதாக பரவும், சென்னையில் தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. பாதிப்பை குறைக்க மக்கள் ஒத்துழைப்பு வேண்டும். தனியார் மருத்துவமனைகள் கொரோனா விவரங்களை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் தாங்களாகவே முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் சோதனை […]
பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழ காரணமாக இருந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் உத்தரவு. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பு ரூ.1,297 கோடி மதிப்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த பொங்கல் தொகுப்பு தரமற்றதாக வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தது. பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து […]
கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு […]
சென்னை:சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 9 காவலர்கள் மீது வழக்குப்பதிவு. சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல்ரஹீம் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்கப்பட்டது தொடர்பாக,பெண் காவல் ஆய்வாளர் நஜீமா உட்பட 9 காவலர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டக்கல்லூரி மாணவர் அப்துல்ரஹீம் முகக்கவசம் அணியாமல் சென்றபோது, வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த கொடுங்கையூர் போலீசார் மாணவரிடம் விசாரணை நடத்தினார்கள்.அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாணவரை கொடுங்கையூர் காவல்நிலையத்துக்கு அழைத்து […]
சென்னை:கனிமச் சுரங்கங்களின் நடவடிக்கைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் உள்ள கனிமச் சுரங்கங்களின் நடவடிக்கைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,பூமியின் கீழ் உள்ள சுரங்கங்கள்,கனிமங்கள் ஆகியன தேசத்தின் சொத்துகள் என்ற உயர்நீதிமன்றம்,தொழில் வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில்,தேசத்தின் செல்வம் மற்றும் பொதுநலனையும் பாதுகாத்திட வேண்டும் என்றும்,தமிழகம் முழுவதும் சுரங்கங்களுக்கு உரிமத்தொகை நிர்ணயிக்க ட்ரோன் மூலம் அளவிட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு […]
பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து,திமுக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தரமற்ற பொருட்களை,எடை குறைவான பொருட்களை அளித்து மக்களை ஏமாற்றிவிடலாம்.மக்கள் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள் என்று தி.மு.க. நினைத்திருக்கக்கூடும்,அதனுடைய விளைவுதான் 1,250 கோடி ரூபாய் மக்கள் பணம் வீணடிப்பு எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்,தரமற்ற,மட்டமான பொருட்களை விநியோகித்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ஒப்பந்ததார்களுக்கு எவ்வளவு பணம் […]
சென்னை:தமிழகத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பிப்.1 முதல் பிப்.20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மாணவர் பிரதிநிதிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு […]
சென்னை:கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.குறிப்பாக,கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது,கொரோனா தொற்று உச்சத்தில் இருப்பதாலும்,தேர்தல் நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான […]