தமிழ்நாடு

பாலியல் வழக்கில் “முக்கியப்” புள்ளிகள்., சிவராமன் கொலை.? பகீர் கிளப்பும் அண்ணாமலை.!

சென்னை : பாலியல் வழக்கில் கைதாகி இருந்த சிவராமன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த குற்றச் சம்பவத்தை மறைக்க முயன்றதாக பள்ளி தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர் என மொத்தம் […]

#Annamalai 6 Min Read
Sivaraman - BJP State President Annamalai

சென்னை மக்களே! சனிக்கிழமை (24.08.2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையில் பின்வரும் பகுதிகளில் சனிக்கிழமை (24.08.2024) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கடப்பேரி சிட்லபாக்கம், எஸ்.வி. கோயில் தெரு, வி.வி கோயில் தெரு, ரயில்வே பார்டர் ரோடு, அமர ஜீவா தெரு, சுந்தரம் காலனி 1வது, 2வது, 3வது பிரதான தெரு, ஜெயா நகர் பிரதான சாலை 1வது மற்றும் 3வது குறுக்குத் தெரு […]

#Chennai 2 Min Read
chennai Saturday power cut

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு : சிவராமன் மற்றும் அவரது தந்தை உயிரிழப்பு.!

கிருஷ்ணகிரி : பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியிருந்த முன்னாள் அரசியல் பிரமுகர் சிவராமன் இன்று அதிகாலை உயிரிழந்தார். நேற்று இரவு அவரது தந்தை அசோக்குமாரும் உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 5 நாட்கள் போலி என்.சி.சி முகாம் நடைபெற்றுள்ளது. அந்த போலி என்.சி.சி முகாமில் கலந்து கொண்ட 12 வயது மாணவியை, சிவராமன் எனும் போலி என்.சி.சி பயிற்சியாளர் […]

krishnagiri 6 Min Read
Krishnagiri Sexual Harassment Case - Sivaraman

மாணவிகள் கவனத்திற்கு., பெயர் கூட எழுத வேண்டாம்.. அமைச்சர் கொடுத்த அட்வைஸ்.!

திருச்சி : பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12 வயது மாணவிக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் புகார் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் புகாரில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சிவராமன் உட்பட 11 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து முழுமையான விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழுவை […]

#Chennai 7 Min Read
Tamilnadu Minister Anbil Mahesh

நான் ஏற்கனவே CM… இப்போ PM – விஜய்யின் தாயார் கலகல பேச்சு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவில், “அப்போ சிஎம், இப்போ பிஎம்” என்று தாயார் ஷோபா சந்திரசேகர் பேசியுள்ளார். சென்னை பனையூரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் வைத்து விஜய் தனது கட்சிக் கொடியை இன்று அறிமுகப்படுத்திய விழாவில், அவரது தாயார் ஷோபா, தந்தை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். காலை 9.15 மணிக்குத் தொடங்கப்பட்ட இந்த விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரகேர், தாய் சோபா ஆகியோர் தவெக […]

Shoba Chandrasekhar 5 Min Read
Shoba Chandrasekhar - VIJAY

“அய்யா எனக்கும் உதவி பண்ணுங்க அய்யா” யூடியூபரிடம் உதவி கேட்ட துரைமுருகன்!

சென்னை : அமைச்சர் துரைமுருகன் பிரபல யூடியூபரான ஹர்ஷா சாயிடம் உதவி கேட்டு கமெண்ட்ஸ் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நக்கல் நையாண்டி எல்லாம் நமக்கு கைவந்த கலைப்பா, என்ற கோணத்தில் பிரபல யூடியூபரின் வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ளார் அமைச்சர் துரைமுருகன். அப்படி அவர் செய்துள்ள சம்பவம் தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அமைச்சர் துரைமுருகன் எப்போதுமே தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு மீடியா வெளிச்சம் பார்க்காமல் நகைச்சுவையாக பதில் கொடுப்பதில் வல்லவர். அவர் அப்படி பதில் […]

durai murugan 5 Min Read
harsha sai and durai murugan

“யானை எங்களுடையது..” த.வெ.க-வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பகுஜன் சமாஜ்வாடி.?

சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது என பகுஜன் சமாஜ்வாடி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், இன்று தனது கட்சிக் கொடி, கட்சிப் பாடல் மற்றும் உறுதிமொழியை வெளியிட்டார்.  திரைத்துறையில் செல்வாக்குமிக்க உச்ச நட்சத்திரமாக இருக்கும் சமயத்திலேயே தேர்தல் அரசியலில் களமிறங்கியுள்ள விஜய்க்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், […]

#Chennai 4 Min Read
Bahujan Samaj Party - TVK Vijay

வாகை மலர், போர் யானை, சிவப்பு – மஞ்சள், 28 நட்சத்திரங்கள்.. த.வெ.க கொடியின் குறியீடு என்ன.?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கட்சியின் கொடி எப்படி உள்ளது? அதில் இருக்கும் சின்னங்கள் எதை கூறுகிறது என்று பார்க்கலாம். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அறிமுகம் செய்து வைத்தார். விஜய் கட்சியின் கொடியில் மேலும், கீழும் அடர் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளன. மஞ்சள் நிறத்தின் மத்தியில் வாகை மலர், நட்சத்திரங்கள் உள்ளன. வாகை மலரின் இருபக்கமும் கால்களை தூக்கியபடி 2 […]

#ActorVijay 8 Min Read
tvk flag details

கையை பிடித்த தாய்…கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்?

சென்னை : த.வெ.க கட்சிக்கொடி அறிமுக விழாவில் தாய் ஷோபனா கையை பிடித்து கூப்பிட்டும் போது  விஜய் கண்டுகொள்ளாமல் சென்றதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆக 22 தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் விழா சென்னை  பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், கட்சியின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜயின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபனா , கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு […]

Shoba Chandrasekhar 6 Min Read
vijay and shobana chandrasekhar

தமிழக அமைச்சரவை மாற்றமா.? எனக்கே தகவல் இல்லை.., முதலமைச்சர் ‘பளீச்’ பதில்.! 

சென்னை : தமிழக அமைச்சரவை மாற்றம் பற்றி தனக்கு தகவல் தெரிவிக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். 17  நாட்கள் அமெரிக்கப் பயணத்தில் பல்வேறு பன்னாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க உள்ளார் என கூறப்பட்டுள்ளது. 17 நாட்கள் அமெரிக்க பயணத்திற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமென செய்திகள் வெளியாகின. மேலும், இன்று காலை முதல் வெளியான […]

#DMK 5 Min Read
Tamilnadu CM MK Stalin

இதை கவனித்தீர்களா.? விஜயின் தவெக கொடி அறிமுக விழாவில் நெகிழ்ச்சி நிகழ்வு.!

சென்னை : தவெக கொடி அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்முறையாக விஜய்யின் பெற்றோர் அவரது கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தனர். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் முன்னிலையில், டிவிகே தலைவர் விஜய், கட்சி கொடியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவரது பெற்றோர் ஷோபா, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரும் கலந்து கொண்டனர். விஜய்யின் உரை உட்பட நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காலை 9.15 மணிக்குத் தொடங்கப்பட்ட இந்த விழாவிற்கு […]

sa chandrasekhar 4 Min Read
Tamilaga Vettri Kazhagam Flag Reveal

விஜய்க்கு பிடித்த ‘எண் 4’? இன்று கட்சிக்கொடி அறிமுகம் செய்ய காரணம் இது தான்!

சென்னை :  தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடியை எதற்காகக் இன்று விஜய்  அறிமுகம் செய்தார் என்பதற்கான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கட்சிக்கொடி அறிமுகம்? சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆக 22 தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியைக் கட்சி தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். கட்சிக்கொடியில் மேலும், கீழும் சிவப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் இருந்தது.அத்துடன் , நடுவில் வாகைப்பூவும் அதனைச் சுற்றி 28 நட்சதரிங்களும் வட்ட […]

Tamilaga Vettri Kazhagam 5 Min Read
TVKFlag and vijay

“மூன்று எழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது”! தவெக பாடல் வரிக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன?

சென்னை : தவெக கட்சியின் கொடிப் பாடலை இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். அந்த பாடலின் வரிகளில் உள்ள விளக்கங்களைப் பற்றிப் பார்ப்போம். தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் விழாவானது இன்று காலை 9.15 மணிக்குத் தொடங்கப்பட்டது. இந்த விழாவானது பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாகப் பங்கேற்றனர். விஜயின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் முதன்முதலாக தவெக கட்சி தொடர்பான விழாவில் கலந்து […]

#MGR 8 Min Read
TVK Flag Song

த.வெ.க கொடி அறிமுகம்.! திருமா, செல்வப்பெருந்தகை, சீமான் கூறியதென்ன.?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுகம் மற்றும் விஜய் அரசியல் வருகை குறித்தும் செல்வப்பெருந்தகை, திருமாவளவன், சீமான் ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக உள்ள விஜய் தற்போது தீவிர கள அரசியலில் ஈடுபட தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தனது பயணத்தை துவங்கியுள்ளார். இன்று தனது கட்சிக் கொடியை சென்னை, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றியுள்ளார். மேலும்,  கட்சி […]

#Selvaperunthagai 5 Min Read
Seeman - Thirumavalavan - TVK Vijay

ஆனந்த கண்கலங்கிய விஜய்..! ‘தேம்பி அழுத புஸ்ஸி ஆனந்த்’.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் போது கட்சி தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த கண்ணீர் வடித்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் விழா சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட கட்சி தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். கொடியில் மேலும், கீழும் சிவப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் இருந்தது. நடுவில் வாகைப்பூவும் அதனை […]

Tamilaga Vettri Kazhagam 3 Min Read
Emotional moment vijay

சாதி, மதம், பாலினம்.. ‘அனைவருக்கும் சம வாய்ப்பு’: விஜய்யுடன் உறுதிமொழி ஏற்ற தொண்டர்கள்..!!

சென்னை : மக்களாட்சி, மதச் சார்வின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என்று விஜய் உறுதிமொழி ஏற்றார். சென்னை பனையூரில் இன்று நடைபெற்ற தவெக கட்சிக் கொடியேற்ற விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன், விஜய் கட்சிக்கொடி அறிமுக விழா தொடங்கியது. தவெக கட்சியின் கொடியில், மேலும் கீழும் சிகப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் உள்ள […]

#Chennai 5 Min Read
TVK Vijay

‘இனி மக்களுக்காக உழைப்போம்’ : த.வெ.க தலைவர் விஜய் பேச்சு!

சென்னை : இவ்வளவோ நாள் நமக்காக உழைத்தோம் இனிமேல் நாட்டு மக்களுக்காக உழைப்போம் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.  தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் விழா சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட கட்சி தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். விழாவில் கலந்து கொண்டு கொடியை அறிமுகம் செய்து வைத்த பிறகு பேசிய த.வெ.க. தலைவர் விஜய் ” என் நெஞ்சில் குடியிருக்கும் […]

Tamilaga Vettri Kazhagam 4 Min Read
TVKVijay

தமிழக அமைச்சரவையில் முக்கிய 3 மாற்றங்கள்.! துணை முதல்வர் பதவி அறிவிக்கப்படுமா.?

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதை அடுத்து, தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று காலை முதல் ஓர் முக்கிய செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு 17 நாள் பயணமாக செல்ல உள்ளார். அதற்கிடையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனவும், அதன் அறிவிப்பு இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் […]

#Chennai 4 Min Read
Tamilnadu CM MK Stalin

‘போர் யானை ..வாகை மலர்’! தவெக கொடியை அறிமுகம் செய்தார் விஜய்..!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் விழா சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாகப் பங்கேற்றனர். விஜயின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர். அந்த கொடியில் மேலும், கீழும் சிவப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் இருந்தது. நடுவில் வாகைப்பூவும் […]

Tvk 4 Min Read
TVK Flag

அதிமுக vs பாஜக.! தொடரும் வார்த்தை மோதல்… “நாங்க இல்லாம நீங்க இல்ல…”

சென்னை : அதிமுக மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் இடையேயான வார்த்தை மோதல்கள் தற்போது அதிகரித்துள்ளன. இரு கட்சித் தலைவர்களுமே “நாங்க இல்லாமல் அந்த கட்சி இல்லை” என கூறி வருகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வரையில் அதிமுக – பாஜக ஒரே கூட்டணியில் செயல்பட்டு வந்தன. அதன் பிறகு, பல்வேறு அரசியல் சூழ்நிலை காரணமாக பாஜக – அதிமுக கூட்டணி முறிந்தது. பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளும், அதிமுக தலைவர்கள் பற்றி […]

#ADMK 14 Min Read
BJP State president Annamalai - ADMK EX Minister Jayakumar