பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் எனும் கிராமத்தில் இயங்கி வரக்கூடிய மாரியம்மாள் எனும் பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு பிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த […]
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாஜகாவைச் சேர்ந்த கல்யாண்ராமன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக நிர்வாகி கல்யாணராமன் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்ததை அடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் மீது 4 பிரிவுகளின் மீது […]
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அவருடைய கல்வி கட்டணம் ரத்து செய்யப்படுவதற்கான எல்லாச் சூழலையும் உருவாக்கித் தருவோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.ஏற்கனவே இரண்டு கட்டங்களாக இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இன்று 3-ஆம் கட்டமாக விழுப்புரம் மாவட்டம் கானை குப்பம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் […]
கிராம சபை கூட்டங்களை நடத்த கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கிராம சபை கூட்டங்களை நடத்த கோரி திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விரசனைக்கு வந்தபோது, கிராம சபை கூட்டங்களை நடத்த கோரிய வழக்கில் ஒருவாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்காவிட்டாலும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று […]
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் எனும் கிராமத்தில் இயங்கி வரக்கூடிய மாரியம்மாள் எனும் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையில், பணிபுரிந்த 11 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு […]
அதிமுக-பாஜக கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் என்று அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். டெல்லி நாடாளுமன்ற மக்களவையில் இன்று பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்தரநாத், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு மூன்றாவது முறையாக அதிமுகவே தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்தபோது ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துவிட்டு தற்போது தமிழகம் வந்து […]
அருப்புக்கோட்டை அருகே நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இந்த நீதிமன்றத்தை காணொளி மூலம் சென்னையில் இருந்தபடி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி திறந்து வைத்தார். அப்போது, பேசிய அவர், மை லார்ட், லார்ட்ஷிப் என நீதிபதிகளை அழைக்கும் முறைகளை நிறுத்தி விட்டு மரியாதை நிமித்தமாக ‘சார்’ என்று சொன்னாலே போதும் என தெரிவித்தார். நிலம் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து ஏராளமான பொது நல வழக்குகள் வருகிறது. ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.வளர்ச்சி மீது […]
வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் சலுகை தந்திருப்பதால் பெட்ரோல் விலை உயர்வு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பாஜக பிரமுகர் குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பிரமுகர் மற்றும் நடிகையுமான குஷ்பு, உலக முழுவதும் இந்த கொரோனா வைரஸால் பொருளாதார ரீதியாக மிக பெரிய பாதிப்பு எல்லாருக்கும் இருக்கு. ஆனால் இதே சமயத்தில் பட்ஜெட் தாக்கல் வரும்போது, பொதுமக்கள் பாதிப்படைய கூடாது என்று எந்தவொரு வரியையும் மத்திய அரசு கொண்டு வரவில்லை. இது […]
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அருகேயுள்ள பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் எனும் கிராமத்தில் இயங்கி வரக்கூடிய மாரியம்மாள் எனும் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையின் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்த நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் […]
பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் இரண்டாவது நாளான இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிசாமி மக்கள் மத்தியில் பேசியபோது, நேற்று திருப்பூர் மாவட்டம் விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள், அமைச்சர்கள், மற்றும் சட்டப்பேரவை துணை தலைவர்களும் தங்களது கருத்துக்களை எடுத்து வைத்தனர் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆகையால், […]
நீர்நிலைகள் வாழ்வாதாரத்திற்கு நுரையீரலை போன்றது என்பதால் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் நீதிபதிகள் கருத்து. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 27 நீர்நிலைகள் காணவில்லை என பொன்தங்கவேல் என்பவர் கடந்த ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நீர்நிலைகள் வாழ்வாதாரத்திற்கு நுரையீரலை போன்றது என்பதால் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் இருந்து காக்க வேண்டியது தமிழக அரசு மாநகராட்சி அதிகாரிகளின் கடமை. சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை […]
தேர்தல் பிரச்சாரங்களில் ஊழல் குறித்து பேசும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திடிரென வந்து வேகமாக தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றார். நல்லாட்சி தருவேன் என்று கூறி, அறிக்கையெல்லாம் வெளியிடுகிறார்கள். ஆனால், திமுக பற்றி ஒரு வார்த்தை கூட கமல்ஹாசன் பேசாதது ஏன்? […]
மக்களுக்கு தேவையான பல திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளான இன்று உடுமலைபேட்டையில் மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுக அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்றும் மக்களுக்கு எதும் செய்யவில்லை எனவும் முக ஸ்டாலின் குற்றசாட்டுகிறார் என்று முதல்வர் கூறியுள்ளார். அவர்கள் தெரிந்து பேசுகிறார்களா தெரியாமா பேசுகிறார்கள் என்று கூறிய முதல்வர், மக்களுக்கு தேவையான பல திட்டங்களை அதிமுக அரசு […]
திமுகவை விட இந்த நிகழ்ச்சியை ஆளும் கட்சியினர் தான் அதிகம் பார்ப்பார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.ஏற்கனவே இரண்டு கட்டங்களாக இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இன்று 3-ஆம் கட்டமாக விழுப்புரம் மாவட்டம் கானை குப்பம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் […]
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தற்போது அதிமுக, திமுக இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மீனவர்களின் பாதுகாப்புக்காக வாங்கிய வாக்கிடாக்கியில் அமைச்சர் ஜெயக்குமார் ரூ.300 கோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில், ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர தமிழக அரசு ஒப்புதலைப் பெற்ற […]
சென்னை மெட்ரோ ரயில் நிர்வனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் கோரிக்கை கருத்தில்கொண்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை உச்ச நேரங்களில் ( peak hours) 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை ஐந்து நிமிட இடைவெளியில் இயக்க முடிவு செய்துள்ளது. எனவே இன்று முதல் மெட்ரோ ரயில் சேவைகள் உச்ச நேரங்களில் (peak hours) காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி […]
கூட்டணி குறித்து தலைமை தாங்கும் அதிமுகவை தான் கேட்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஊடகங்கள் எந்தவொரு செய்தியை வெளியிடுவதாக இருந்தாலும், தலைமை கழகத்தை தொடர்புகொண்டு, அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகள் இனி கலந்து கொள்வர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தல் கூட்டணி குறித்து இனி என்னிடம் […]
சென்னையில் தேமுதிகவின் கொடிநாளையொட்டி பிரச்சார வாகனத்தில் சென்று பிரச்சாரத்தை தொடங்கினார் தலைவர் விஜயகாந்த். தேசிய முன்போக்கு திராவிடர் கழகத்தின் கொடி நாள் விழா இன்று பிப்.12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2000 ஆம் ஆண்டில் விஜயகாந்த் அவருடைய ரசிகர் மன்றத்தை தொடங்கியபோது இந்த நாளில் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு 2005ம் ஆண்டு தேமுதிகவாக மாற்றப்பட்ட பின்னரும் ரசிகர் மன்றத்தின் கொடிதான் என்று இருந்த நிலையில், கொடி நாள் நிகழ்வை விருங்கப்பாக்கம் இருக்கக்கூடிய […]
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் எந்த திட்டங்களும் நிறைவேற்றபடவில்லை என ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் திமுகதான் மத்திய அரசுக்கு அடிமையாக இருந்தது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர், விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார்.
தேர்தல் தேதிக்கு பின்னர் தான் 10, +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளா்களிடம் பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே 10 மற்றும் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். மேலும், 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை நூலகமாக மற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். மத்திய அரசு கொண்டு வரும் […]