பிரதமர் மோடி தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கி வருகிறது. சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அரசு முறை திட்டங்களை திறந்து தொடங்கி வைப்பதற்கு வரவேண்டும் என்ற அழைப்பிதழை நேரடியாக முதல்வர் வழங்கினார். இதைத்தொடர்ந்து, பிரதமர் பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை தரவுள்ளார். பிரதமர் மோடி நாளை 10.30 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் முதல்வர், துணை முதல்வர் […]
மக்கள் வீட்டில் இருந்தபடியே சேவையை இன்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். தற்போது வெவ்வேறு அரசு துறைகள் தங்களுக்கு என்று தனித்தனியாக துறைவாரியாக குறைதீர் மையங்கள் மற்றும் இணையதளங்களை செயல்படுத்தி வருகின்றனர்.மாவட்ட அளவில் திங்கள் கிழமை தோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் ,மாதாந்திர மனு நீதி நாள் ,விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் உள்ளிட்டவையும்,மாநில அளவில் முதலமைச்சர் தனிப்பிரிவு உள்ளிட்டவை மூலமாக மனுக்கள் பெறப்பட்டு தீர்வுகள் காணப்படுகின்றன.இதனால் ஒரே நபர் பல்வேறு இடங்களில் மனுக்களை […]
உயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது, உடனடி நடவடிக்கை தேவை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேற்று பிற்பகல் மாரியம்மாள் என்ற பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் நேற்றுவரை 15 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது 19ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்கு பிரதமர், முதல்வர் உள்ளிட்டவர்கள் […]
அனைத்து துறைகளிலும் அதிமுக அரசில் ஊழல் நடைபெற்றதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். விருத்தாச்சலம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்ட முக ஸ்டாலின் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசிய அவர், மாதம் ரூ.5,000 கொடுங்க என்று நான் சொன்னேன், காதுல கேட்காதது போல் முதல்வர் பழனிசாமி இருந்தார். ஆனால் கோடிக்கணக்கான பணத்தை கான்ட்ராக்ட் நபர்களுக்கு கொட்டி கொடுத்துள்ளார். கொரோனா காலத்திலும் டெண்டர் முறையில் செய்தார்கள். அப்போது, […]
நாளை பிரதமர் மோடி சென்னைக்கு வருவதை ஒட்டி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கனரக மற்றும் சரக்கு வாகனங்களை சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. மாநகர பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணா சாலை வழியாக செல்லலாம். ராயபுரத்தில் இருந்து […]
மத்திய பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் 2020-21-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பலரும் பல்வேறு விதமாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு பட்ஜெட் தாக்கலில் எந்தவொரு சலுகையும் இல்லை என கூறப்பட்டது. இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய அமைச்சருமான […]
நேற்று தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்திய இடத்தில் பொக்லைன் இயந்திரம்கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். அப்போது, நிலம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன் வாக்குவாதம் செய்தார். இதனால், காட்டுமன்னார்கோவில் போலீசார் இளங்கீரனை கைது செய்தனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், திருச்சி – சிதம்பரம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வீராநந்தபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளை இடிக்க […]
கீழடி 7-ஆம் கட்ட அகழாய்வு பணியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழக தொல்லியல்துறை சார்பில் கீழடியில் 6-ஆம் கட்ட அகழ்வாராட்சி பணி முடிவடைந்த நிலையில், இன்று 7-ஆம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியுள்ளது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய நான்கு இடங்களில் 7-ஆம் கட்ட அகழாய்வு பணி நடக்கவுள்ளது என்பது […]
விருதுநகர் மாவட்டம் காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.இந்த வெடி விபத்தில் இது வரை 19 பேர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் இன்று சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளதாக தகவல் […]
புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.286 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது . நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டில் நிவர் புயல் பாதிப்புகளுக்கு ரூ 63.14 கோடியும், புரவி புயல் பாதிப்புகளுக்கு ரூ 223.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு புரட்டிப்போட்ட நிவர் மற்றும் புரவிபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய […]
விருதுநகர் அருகே ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலையில் 40-க்கும் மேற்ப்பட்ட அறைகள் உள்ளன.அதில்,நேற்று வழக்கம் போல தொழிலாளர்கள் தங்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது, மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த வெடி விபத்தில் இது வரை 19 பேர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. […]
சென்னை தலைமை செயலகத்தில் பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளுக்கு வழங்கி இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி. கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் தள்ளுபடி செய்யப்படுவதாக கடந்த 5ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என முதல்வர் கூறிருந்தார். பயிர் கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகள் மற்றும் […]
மக்களின் குறைகளை தெரிவிக்க 1100 என்ற எண்ணை அழைத்து அரசின் சேவையை பெரும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஆண்டின் முதல் தமிழக கூட்டத்தொடரில் உரையாற்றிய தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித், அரசின் சேவைகளை வீட்டில் இருந்தே பெற 1100 என்ற எண்ணை அழைக்கும் சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்த எண்ணிற்கு அழைத்தால் அரசின் சேவைகளை விரைவில் பெற இயலும் எனவும் குறிப்பிட்டார். தமிழக அரசின் அனைத்து […]
நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் உயர்ந்து 4.40 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் […]
மாமல்லபுரம் கடற்கரையில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராகவன் ஏற்பாட்டில் 50 டன் மணல் கொண்டு ரூபாய் 20 லட்சம் செலவில் 160 அடி நீளத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணல் சிற்பத்தை கும்பகோணத்தை சேர்ந்த கவின் கல்லூரியின் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.இந்த மணல் சிற்பத்தை தமிழ் வளர்ச்சி,பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கொடியசைத்து திறந்து வைத்தார்.அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில் […]
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஊடகங்கள் எந்தவொரு செய்தியை வெளியிடுவதாக இருந்தாலும், தலைமை கழகத்தை தொடர்புகொண்டு, அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தேர்தல் கூட்டணி குறித்து இனி என்னிடம் கேட்பதை விட, யார் இந்த கூட்டணிக்கு தலைமையோ (அதிமுக) அவர்களிடம் கேளுங்கள் என்றும்,அதிமுகவாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றார்.சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லையெனவும் […]
பயிர் கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 5-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இது விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட, கடன் தள்ளுபடி 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாட்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் தேர்தல் பரப்புரையில் போது தெரிவித்திருந்தார். இந்நிலையில், […]
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பட்டாசு ஆலையில் 40-க்கும் மேற்ப்பட்ட அறைகள் உள்ளன. அதில், இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் தங்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளை செய்து கொண்டு இருந்தனர். அப்போது, மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலையில் இன்று 70-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை […]
விருதுநகர் பட்டாசு அலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் கூறப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று பிற்பகல் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்திலேயே 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்துள்ளனர். அச்சகுளத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த 33 பேருக்கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பள்ளி மாணவி உட்பட 11 பேர் பலியான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என முக ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வந்த பட்டாசு அலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதுபோன்று […]