சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் போராட்டம் நடைபெற்றது. சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்புவதோடு, மத்திய அரசுக்கு தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்கின்றனர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் […]
திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள வக்பு சட்டதிருத்தத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வக்பு வாரிய சொத்துக்களை அடையாளம் காணும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கும் திருத்தம், வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத பிரதிநிதிகள் இடம்பெறுவது உள்ளிட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்ட திருத்தத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வக்பு வாரிய சட்டதிருத்தத்திற்கு […]
சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இலங்கை பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி இலங்கைப் பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், இலங்கை செல்லும் பிரதமர் மோடி, ‘கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்’ என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் […]
சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு வந்துள்ளது. விஜய் தனது அரசியல் பயணத்தை 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிரப்படுத்தி வருவதால், அவரது பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அவர் பொது நிகழ்ச்சிகளில் தனியார் பாதுகாவலர்களை (பவுன்சர்கள்) பயன்படுத்தி வந்தார், ஆனால் இப்போது மத்திய அரசின் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அவர் செல்லும் இடங்களில் […]
கோவை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. அதில் முக்கியமாக தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவில் நாள் தோறும் ஏதேனும் ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. இதில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் போல மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி இருக்கும் என கூறப்பட்டது. அதற்கேற்றாற் போல அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லியில் பாஜக தேசிய தலைமையை சந்தித்து பேசினர். […]
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக உள்ளது என்றும், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இதனை இன்னும் சரியான கவனத்தில் அரசு எடுத்துக்கொள்ளவில்லை என எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியும் வருகிறார்கள். இந்த சூழலில், இன்று […]
சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி, ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம்தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.காலை 10 மணி முதல் தொடங்கிய […]
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 6 இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது ஏராளமான பெண்களும், ஆண்களும் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். கோவையிலும் தவெகவினர் […]
சென்னை :காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தாலுகாவில் 933 பணியிடங்கள், ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 1299 பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்த 20 – 30 வயதுக்குள் இருப்பவர்கள் www.tnusrb.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த […]
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜய் அறிவித்திருந்தார். இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அவரது அறிக்கையில், ஆட்சி அதிகாரம் இருந்தால், எந்தவொரு சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான சட்டத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்ற மனநிலை கொண்ட ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த கதி வரலாற்றில் உள்ளதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை கையில் எடுத்துள்ளதாக பாஜக அரசையும் அவர் கண்டித்துள்ளார். இந்த நிலையில், இன்று சென்னை […]
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 4, 2025 அன்று அதிகாலை, சுமார் 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, மாநிலங்களவையில் இந்த மசோதா 128 எம்.பி.க்களின் ஆதரவு வாக்குகளுடனும், 95 எம்.பி.க்களின் எதிர்ப்பு வாக்குகளுடனும் நிறைவேறியது. இதனையடுத்து, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி […]
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், இருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. அதனை தொடர்ந்து இன்று மற்றும் நாளை வானிலை குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, […]
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் இன்று “கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், மதுரை எம்பி சு.வெங்கடேசன் என பல்வேறு அரசியல் […]
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றம் செய்யப்பட்டது. இது இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஆளும் திமுக அரசு தீர்மானமும் நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியான சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வக்பு வாரிய […]
சென்னை : கோடை காலத்தில் கொளுத்தும் வெயியிலின் தாக்கத்தின் காரணமாக உடல் சூட்டை தணிக்க பொதுமக்கள் தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள. ஆனால், கடந்த சில நாட்களாக தர்பூசணியில் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதையடுத்து, தர்பூசணியில் ரசாயனம் கலப்பதாக பரவும் வதந்தியால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். ஒரு கிலோ தர்பூசணியை வியாபாரிகள் 2 ரூபாய்க்கு கேட்பதாக வேதனையடைந்துள்ளனர். மேலும், விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி பொதுமக்களிடம் கூடுதல் விலைக்கு விற்பதாகவும் […]
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று இலங்கை அரசுடன் பேசி தமிழ்நாடு மீனவர்கள், அவர்தம் படகுகளை விடுவிக்க வலியுறுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது […]
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் (எம்எல்ஏக்கள்) கேள்விகளுக்கும், தொகுதி சார்பான கோரிக்கைகளுக்கும் துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதில், இன்று பாமக எம்எல்ஏ மேட்டூர் சதாசிவம் வருவாய்த்துறை மானிய கோரிக்கையில் பங்கேற்று தனது கோரிக்கையை முன்வைத்தார். அப்போது அவர் தொடங்கும் போது, எங்கள் குலதெய்வமாகிய அண்ணாமலையாரை வணங்கி எனத் தொடங்கினார். அப்போது அவையில் இருந்த சக உறுப்பினர்கள் குலா […]
கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் திருட்டு என்று சில தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளிவருகின்றன. மேலும், துறவி வேடத்தில் வந்து வெள்ளி வேலை மர்மநபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியானது. தற்போது, மருதமலை கோயிலில் வெள்ளிவேல் திருட்டு நடக்கவில்லை. அடிவாரத்தில் தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபத்தில் திருட்டு நடந்துள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். […]
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிதிருந்தது. இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, மதுரை, விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே கனமழை வெளுத்து வாங்குகியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு […]
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது நள்ளிரவு வரை 12 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடந்த நிலையில், இது அரசியலமைப்புக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்டந்தோறும் நாளை (ஏப்ரல் 4, 2025) ஆர்ப்பாட்டம் நடத்த நிர்வாகிகளுக்கு தவெக தலைமை உத்தரவிட்டு […]