சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதில், எம்எல்ஏக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், டாஸ்மாக் ஊழல் புகாரில் சிக்கிய ‘தியாகி யார்’ என்ற பேட்ஜை அதிமுகவினர் அணிந்து வந்தனர். இதுகுறித்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின், “நொந்து நூடுல்ஸாகிப்போன அதிமுக தொண்டர்கள்தான் தியாகி… முதல்வர் பதவிக்காக காலில் விழுந்ததும் ஏமாந்தாரே அந்த அம்மையார்தான் தியாகி” என்று பதிலடி கொடுத்தார். […]
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில் தமிழ்நாடு பாஜகவுக்கு புதிய தலைவரை பாஜக தேசியத் தலைமை அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதற்கேற்றாற்போல அடுத்தடுத்தடுத்த நகர்வுகள் இருக்கிறது. 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகும் பட்சத்தில், ஏற்கனவே அதிமுக தலைவர்களுடன் உரசலில் ஈடுப்பட்டுள்ள அண்ணாமலையை மாற்றக்கோரி அதிமுக மூத்த நிர்வாகிகள் பாஜக தேசிய தலைமைக்கு கோரிக்கை வைத்ததாக செய்திகள் […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதில், எம்எல்ஏக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு வருகையில், அதிமுக எம்எல்ஏக்கள் “யார் அந்த சார்?’ எனும் வாசகம் அடங்கிய பேட்ஜ் அணிந்து வந்தனர். மேலும், சபாநாயகரிடம் முன் அனுமதி பெறாமல் இது தொடர்பான பதாகைகளையும் பேரவைக்குள் கொண்டு வந்ததாக தெரிகிறது. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றது குறித்து […]
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான TVK நிறுவனத்தில் இந்த சோதனை தொடர்ந்தது. சென்னையில் அடையாறு, தேனாப்பேட்டை, சிஐடி காலனி, எம்ஆர்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, கே.என்.நேருவின் மகனும், திமுக எம்பியுமான அருண் நேருவுக்கு தொடர்புடைய சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நிறுவனத்திலும் அமலாக்கத்துறையினர் தங்கள் […]
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றும் வழக்கம் போல காலையிலேயே கூட்டத்தொடர் தொடங்கியது. தற்போது எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி குறித்த வீட்டு வசதித் துறை மானிய கோரிக்கைகளை கேட்டு வருகின்றனர். இன்று காலை முதலே திமுக அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் சகோதரன் கே.என்.ரவிச்சந்திரன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் கே.என்.நேரு மகனும், திமுக எம்.பியுமான […]
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் […]
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட 5 இடங்களில் அதிகாலை முதலே இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக, TVH குழுமம் மீது எந்தவொரு பெரிய சர்ச்சைகள் அல்லது வழக்குகள் பொதுவெளியில் பேசப்படவில்லை என்றாலும், இந்த அமலாக்கத்துறை சோதனை எந்த வழக்கின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும், அமலாக்கத்துறை […]
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலமாகும், இது ரூ.550 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதனுடன் ராமேஸ்வரம் – தாம்பரம் இடையேயான புதிய ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், இன்று துவக்கி வைக்கப்பட்ட பாம்பன் பாலம்தான் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு […]
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே சுமார் ரூ.550 கோடி செலவில் பாம்பன் பாலத்தை திறந்து வைத்தப் பின், ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி, ‘வணக்கம், என் அன்பு தமிழ் சொந்தங்களே’ எனக்கூறி தமிழில் உரையை தொடங்கினார். இந்த விழாவில், விழாவில் ஆளுநர் ரவி, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் பங்கேற்றனர். விழாவில் […]
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே சுமார் ரூ.550 கோடி செலவில், 2.08 கி.மீ நீளத்துக்கு இந்த புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர், சாலை பாலத்தில் இருந்து ஒரு ரயிலையும், கப்பலையும், புதிய பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் […]
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது […]
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில் சென்ற போது, சாலையோரம் திரண்டுள்ள பொதுமக்களை பார்த்து கையசைத்தார். தமிழகம் வந்தைடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நவாஸ்கனி எம்.பி., ராமநாதபுரம் ஆட்சியர் ஆகியோரும் வரவேற்றனர். பாரம்பரிய உடையான பட்டு […]
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் 1,703 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர், 15,634 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம் (ஊட்டி) பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுகாதார உள்கட்டமைப்பு திட்டமாகும். இந்தியாவில் சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்ட இரண்டாவது மருத்துவக் கல்லூரி […]
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், நண்பகல் 12 மணியளவில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த பாலம், நூற்றாண்டு கால பழமையான பாம்பன் ரயில்வே பாலத்திற்கு மாற்றாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடனும் கட்டப்பட்டுள்ளது. மேலும், ரயில், கப்பல் போக்குவரத்தையும் கொடியசைத்து […]
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும் அரசியல் தளத்தில் தனது இருப்பை காட்டி கொள்கிறார். அவர் தற்போது தவெக தலைவர் விஜயை டார்கெட் செய்து தனது அரசியல் கருத்துக்களை தெரிவித்துள்ளார். முன்னதாக ஒரு செய்தியாளர் சந்திப்பில் , மேடையில் வீரபாண்டிய கட்டபொம்மன் போல வீர வசனம் பேசுகிறார். களத்திற்கு வர வேண்டும். விஜய் 2026-ல் எந்த தொகுதியில் நின்றாலும் நான் எதிர்த்து நிற்பேன். […]
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு தொடர்பாக தூத்துக்குடி விஏஓ தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதில், காவல்துறை விசாரணையில் வின்சென்ட் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு உயிரிழந்தார் என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதனை அடுத்து. அப்போது பணியில் இருந்து தற்போதைய தூத்துக்குடி டிஎஸ்பி ராமகிருஷ்ணன், தென்காசி இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் […]
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்க்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் மாநில சுய ஆட்சி பறிக்கப்படும் என்று குற்றம் சாட்டி வருகின்றன. இன்று சென்னை காட்டாங்குளத்தூரில் ஒரு தனியார் கல்லூரியில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். ஒரே […]
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்த வளர்ச்சியாகும். 2023-24 நிதியாண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) ரூ.15,71,368 கோடியாக இருந்தது, இது 2024-25 நிதியாண்டில் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த தகவல் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation) முன்கூட்டிய மதிப்பீடுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு […]
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. 05-04-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், […]
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று வருகிறது. அப்படி தான் நேற்று நடைபெற்றபோது மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து பேசிய மதிமுக (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்) பொதுச்செயலாளர் வைகோவுக்கும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே நடந்த காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாதத்தின் போது, வைகோ “தமிழ்நாட்டில் […]