MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். தமிழகத்தில் நாடாளுமன்றம் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், அனைத்து பிரதான அரசிய கட்சி தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு, தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின், தங்களது மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த […]
Election2024 : வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய விட்ருவேன் என பறக்கும் படை அதிகாரிகளை பாஜக வேட்பாளர் மிரட்டும் தொனியில்பேசியுள்ளார் . தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், சாலையில் வரும் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரது வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். திருப்பூர் பாஜக வேட்பாளர் […]
IT Raid: தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரில் உள்ள ஒரு தொகுதி மொத்தம் 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடும், வேட்பாளர் பட்டியல், தேர்தல் வாக்குறுதி என தீவிரமாக ஈடுபட்டு […]
TN Schools: தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை. தமிழ்நாட்டில் 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
Election2024 : கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஜோதிமணி பிரச்சாரம் செய்கையில் தனது அம்மாவை நினைத்து அழுதுவிட்டார். கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று தனது சொந்த ஊரான அறவன்குறிச்சி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் அங்குள்ள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார் . அப்போது பேசுகையில் மறைந்த தனது தாய் நினைவு வந்து கண்ணீர் விட்டு அழுதார் . அவர் பேசுகையில் , சிலிண்டர் விலை 300 இருந்தது 1000 ரூபாய் ஆகிவிட்டது […]
Supreme court: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு 8ம் தேதி விசாரணை. வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 8ம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து ஐ பெரியசாமியை விசாரணை நீதிமன்றம் விடுவித்த […]
Election2024: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ம் தேதி பொது விடுமுறை. நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன்பின், ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பல்வேறு மாநிலங்களில் 6 கட்டங்களாக வாக்குப் பதிவு […]
Mayiladuthurai: மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை இன்னும் சிக்காததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்மங்குளம் என்ற பகுதியில் நேற்று முன்தினம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை அடுத்து சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தது பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதன்பின் சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறை கண்காணித்து வரும் நிலையில், பொதுமக்கள் வீடுகளை விட்டு யாரும் வெளியே வர […]
MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மற்றும் கடலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த சூழலில், திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைவர்களும் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், வரும் தேர்தலில் திமுக 21 இடங்களில் நேரடியாக போட்டியிடும் நிலையில் கூட்டணி கட்சிகள் […]
Katchatheevu : தேர்தல் நேரம் என்பதால் 50 வருடத்துக்கு முன் முடிந்த பிரச்சனையை பாஜக கையில் எடுத்துள்ளது – இலங்கை முன்னாள் தூதர். அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கச்சத்தீவு விவகாரம் குறித்த தகவலை சேகரித்து அதனை பொதுவெளியில் தெரிவித்தார். அதில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் திமுக ஆட்சியும் இருந்த போது தான் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என குற்றம் சாட்டினார். இதனையே பிரதமர் மோடி மற்றும் […]
PM Modi : கொரோனாவுக்கு மருந்து பிரதமர் மோடி பொறுப்பில் இருந்ததால் தான் கண்டுபிடிக்கப்பட்டது என நடிகர் செந்தில் பிரச்சாரம் செய்தார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதி நெருங்கும் வேளையில், அரசியல் தலைவர்கள் , வேட்பாளர்கள் மட்டுமல்லாது நட்சத்திர பேச்சாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். இதனால் தற்போது தான் தமிழக தேர்தல் களம் என்பது களைகட்ட ஆரம்பித்துள்ளது. திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து பாஜக நட்சத்திர பேச்சாளர் நடிகர் செந்தில் இன்று […]
Election2024: மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் மேற்கொள்ள இருந்த பிரச்சார நிகழ்வுகள் ரத்து. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது . இதனை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் குறிப்பித்தக்க இடத்தை பிடிக்க பாஜக தலைமையிலான கூட்டணி அமைத்து தேர்தல் களமிறங்கியுள்ளது. இந்த சூழலில் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக கூட்டணி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முக்கிய தலைவர்களும் தமிழகத்தில் பரப்புரை நிகழ்வுகளில் ஈடுபட உள்ளனர். […]
Senthil balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 31ஆவது நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி அமலாத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதன்பின் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் ஜாமீன் கோரி பல முறை மனு தாக்கல் […]
Fisherman : இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 24 பேர் விடுதலை. கடந்த மார்ச் மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் மீனவர்களை விடுவிக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இதன்பின், 19 மீனவர்களையும் விடுதலை செய்து இலங்கை […]
Election2024 : தமிழகத்தில் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, தபால் வாக்குப்பதிவு பணிகள் தொடங்கி திருச்சி, ஈரோடு, கோவை என பல்வேறு பகுதிகளில் தபால் வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. வருகிற ஏப்ரல் 18ஆம் […]
Election2024 : திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய் ஊழல். – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று கரூரில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி கடுமையாக விமர்சித்தார். அவர் நேற்று பிரச்சாரத்தில் பேசுகையில், இந்த மாவட்டத்துல ஒருத்தர் இருந்தார், பேரு செந்தில் பாலாஜி. […]
Election2024 : தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றிபெற்றால் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறது. மக்களவை தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் பிரச்சார வேலையில் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே போல அரசியல் வெற்றி கருத்து கணிப்புகளையும் பல்வேறு அரசியல் பிரபலங்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக வர வாய்ப்புள்ளது என அதிமுக எம்எல்ஏ ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வந்த மதுரை, திருப்பரங்குன்றம் […]
Premalatha: பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தல் கொடுத்ததாக பிரேமலதா விஜயகாந்த் பரப்பரப்பு குற்றசாட்டு. மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அரசியல் கட்சி தலைவர்கள் மாறி மாறி குற்றசாட்டுகளை முன்வைத்து விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்பரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த தொகுதியில் தேமுதிக […]
Election2024 : கிழக்கு சீமையிலே பட பாணியில் வாக்கு சேகரித்தார் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தேதி தமிழகத்தில் நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில் , அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் , நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரும் தனது கணவர் சரத்குமார் உடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம், கப்பலூர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் […]
MK Stalin: ஏழைகளுக்கான அரசு என பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் சிறப்புகளை எடுத்துரைத்து, மத்திய பாஜக அரசை விமர்சித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில், தற்போது ஏழைகளுக்கான அரசு என பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என […]