TNSchools: தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தவேண்டும் என்றும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அனைத்து வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொறுத்தப்பட்டிருக்க வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்தி, காட்சிகளை சேகரித்து காவல்துறையிடம் வழங்க வேண்டும். பள்ளி வாகன […]
Election2024: தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக வரும் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதனால் திமுக, அதிமுக, பாஜக என அனைத்து பிரதான கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் மக்களவை தேர்தலுக்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், […]
Su Venkatesan : அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு சு.வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மதுரை மக்களவைத் தொகுதியின் அதிமுக சார்பில் டாக்டர் சரவணன் என்பவரும், திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசனும் போட்டியிடுகின்றனர். கடந்த 2019 மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெற்று மதுரை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் […]
Election2024 : கரும்பு விவசாயி சின்னம் எப்படி சுயேட்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவருக்கு போட்டியாக அதே பன்னீர்செல்வம் எனும் பெயர் கொண்ட 5 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இதில் அனைவரது வேட்புமனுவும் ஏற்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் அண்மையில் அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவருக்கு கரும்பு […]
Thirumavalavan: மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ரேஷன் கடைகளே இருக்காது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் என இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் பொதுச் செயலாளர் ரவிக்குமாரரும் போட்டியிடுகின்றனர். திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் விசிக பானை […]
MK Stalin: மோடியின் குடும்பம் என்பது ED, IT, CBI தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிவிட்டுள்ளார். மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறக்க நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் குடும்பம் என்பது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார். அதில், பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில நாளேடு. பாஜகவுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் […]
Edappadi Palaniswami: அதிமுகவின் வெற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சாரும் என்று செயல் வீரர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் அனல் பறக்கும் களமாக மாறியுள்ளது. இந்த சூழலில், சேலம் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சேலம் […]
Annamalai: என் மீது பயம் இருப்பதால் என்னை ஆட்டுக்குட்டி என விமர்சனம் செய்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அத்தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அண்ணாமலை கூறியதாவது, […]
Madurai Chithirai Festival : கள்ளழகர் திருவிழாவில் உயர் அழுத்த மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது . உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா இந்தாண்டு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதன் பிறகு, வரும் ஏப்ரல் 22இல் சித்திரை திருவிழா தேரோட்ட நிகழ்வும், அதனை தொடர்ந்து விழாவின் உச்ச நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் ஏப்ரல் 23இல் நடைபெற இருக்கிறது. கள்ளழகர் ஆற்றில் […]
PM Modi: பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள ஏப்ரல் 9ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக தமிழகத்தில் குறிப்பிடத்தக்க இடங்களை பிடிக்க […]
Kamal Haasan : நான் மக்கள் மீது கொண்ட காதல் சாதாரணமானது அல்ல, அதையும் தாண்டி புனிதமானது என கமல்ஹாசன் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் மக்களவை தேர்தல் வரவுள்ளதால், அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், நேற்று திருச்சி மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்று […]
TN Govt: வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு. கடந்தாண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை கொட்டி தீர்த்தது. இதில், குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மிதந்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து, வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் வாழ்வாதாரம் […]
Mayiladuthurai: மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தனியார் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றிரவு செம்மங்குளம் என்ற பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதாவது, சிறுத்தையின் கால் தடம் இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். பொதுமக்கள் புகாரை அடுத்து சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இதன்பின் சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறை கண்காணித்து வருகின்றனர். மேலும், […]
Edappadi K Palaniswami : முதல்வர் ஸ்டாலின் பொய்யை தவிர எதுவும் பேசமாட்டார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கிய நிலையில் பல அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தருமபுரி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகனை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் வகையில் கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்தார். அப்போது,அதில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கட்சியை […]
Election2024 : அதிமுக வேட்பாளரை வெற்றிபெற செய்தால் கட்சி நிர்வாகிகளுக்கு பரிசு என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கடந்த முறை போல அல்லாமல் இந்த முறை எப்படியாவது அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் தீவிர பிரச்சாரம் செய்து வந்தாலும், மறுப்பக்கம், கட்சி நிர்வாகிகள் சோர்ந்து விட கூடாது என அதிரடி அறிவிப்புகளும் அதிமுக சார்பில் வெளியாகி உள்ளது. அதிமுக சார்பில் […]
Udhayanidhi Stalin : சசிகலா காலில் சில்லறை தேடிய எடப்பாடி பழனிச்சாமி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம். வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வடசென்னை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மக்கள் கடந்த தேர்தலில் ஒரு மனதாக […]
Election2024 : ஆண்கள் மட்டும் என்ன இளிச்சவாயனுகளா என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சாரத்தில் கூறினார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால், இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் திமுக அரசு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் மக்களிடம் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக ராணி ஸ்ரீகுமார் […]
Annamalai : சீமான் அண்ணனுக்கு சின்னமும் இல்லை. ஓட்டும் இல்லை என அண்ணாமலை பேட்டி. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரை மேலூரில், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி தலைவர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசுகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து தனது கருத்துக்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், என்னென்னமோ சொல்லிவிட்டு கடைசியாக, என் மண் என் மக்கள் , தமிழ் தேசியம் என பேச ஆரம்பித்து விட்டார் அண்ணாமலை. அது என் […]
Election2024 : டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கள் கடைகளை திறக்க வேண்டும் என அண்ணாமலை பிரச்சாரம் செய்தார் . தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இன்னும் மூன்று வாரத்தில் வர உள்ளதால், மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. தங்கள் கட்சி வாக்குறுதிகளை கூறுவது போல பிற கட்சிகளையும் சரமாரியாக அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து தங்கள் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கோவை மக்களவைத் தொகுதியின் பாஜக சார்பில் அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். […]
PM Modi : தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி வரும் 9ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார். இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதற்கட்ட வாக்குப்பதிவு தேதியான ஏப்ரல் 19ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தமாக 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. […]